1எம்டிபி-மீது போலீசில் புகார் செய்த அம்னோ தலைவரின் பதவி பறிபோனது

umno1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(எம்டிபி)த்துக்கு  எதிராக  போலீசில்  புகார் செய்து  பரபரப்பூட்டிய  பினாங்கு  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹசான்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.
“எனக்கு  நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. டிவி3-இல்  அச்செய்தி  அறிவிக்கப்பட்டதாக  நண்பர்கள் கூறினார்கள்”, என பத்து கவான்  அம்னோ  தொகுதித்  துணைத்  தலைவரான  கைருடின்  சொன்னார்.

டிசம்பரில் அவர்  செய்த  போலீஸ்  புகார்தான்  இதற்குக்  காரணமா  என்று  வினவியதற்கு, “நான்  எதையும் ஊகிக்க  விரும்பவில்லை”, என்றாரவர்.

பினாங்கு  அம்னோ  தொடர்புக்  குழுத்  தலைவர்  சைனல் அபிடின்  ஒஸ்மானைத்  தொடர்பு  கொண்டு  வினவியதற்கு  அவர்  அச்செய்தியை  உறுதிப்படுத்தவோ  மறுக்கவோ  இல்லை.

“இவ்விவகாரம் பற்றி  பினாங்கு  அம்னோ  செயலாளருக்குக்  கடிதம்  அனுப்பியவர்  அம்னோ  தலைமைச்  செயலாளர் தெங்கு  அட்னான்  மன்சூர்.  எனவே, அவர் விளக்கமளிப்பதுதான்  முறையாகும்”, என்றார்.