கித்தா லவான்: சோகோவில் பேரணி நடத்துவது எங்களின் உரிமை

lawanசனிக்கிழமை  கித்தா  லவான்  ஆர்ப்பாட்டத்துக்கு  ஏற்பாடு  செய்திருப்பவர்கள்  கோலாலும்பூரில்  ஒன்றுகூடுவது  தங்களின்  உரிமை  என்பதை  வலியுறுத்துகின்றனர்.

அத்தரப்பினர்,  சிறையில் உள்ள  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  விடுவிக்கப்பட  வேண்டும்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கைகளை  முன்வைத்து  சோகோ விற்பனை  மையத்துக்கு  வெளியில்  பேரணி  நடத்துவார்கள்.

“அது  எங்களின்  உரிமை. எங்கள்  உரிமை  என்னவென்பதைத்  தீர்மானிக்கும் அதிகாரம் போலீசுக்கு  இல்லை. சோகோவில் பேரணி  நடத்தும்  எங்கள்  முடிவில்  மாற்றமில்லை”, என கித்தா  லவான்  ஒருங்கிணைப்பாளர்களில்  ஒருவரான  ஃபாரிஸ்   மூசா  கூறினார்.

ஆர்ப்பாட்டம்  அமைதியாக  நடைபெறும்  என்று  உத்தர்வாதம்  கூறிய  அவர்,  போலீஸ்  ஒத்துழைக்கும்  என்றும்  எதிர்பார்க்கிறார்.