பழைய எதிரி அஸ்மின் எதிரணித் தலைவராவதை ஆதரிக்கிறார் ஜைட்

zaid2010-இல், பிகேஆர்  துணைத் தலைவர்  பதவிக்கு  அஸ்மின்  அலியுடன்  போட்டியிட்டு  அக்கட்சியிலிருந்து  வெளியேறினார்  ஜைட்   இப்ராகிம்.

கட்சித் தேர்தலில்  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாகவும்  அதற்கு  இப்போது  சிலாங்கூர்  மந்திரி  புசாராகவுள்ள  அஸ்மினும்  அன்வார்  இப்ராகிமும்தான்  காரணம்  என்றும்  ஜைட்  அப்போது  குற்றஞ்சாட்டினார்.

ஆனால்,  அதே  ஜைட்  இப்போது  நாடாளுமன்றத்தில்  அன்வாருக்குப்  பதிலாக  எதிரணித்  தலைவர் பொறுப்பை  ஏற்பதற்குச்  சிறந்த  வேட்பாளர்  அஸ்மின்தான்  என்று  பரிந்துரைக்கிறார்.

“அன்வாருக்குப்  பதிலாக  அப்பொறுப்பை  ஏற்கும்  ஆற்றலும்  அரசியல்  திறனும்  அஸ்மினுக்கு  உண்டு.

“அன்வாரின்  மனைவி (பிகேஆர்  தலைவர்)  டாக்டர்  வான்  அசிசா  அல்லது  அவரின்  மகள்களில்  ஒருவரை  அப்பதவியில்  அமர்த்தலாம்  என்ற உணர்வெல்லாம்  தேவையில்லை”, என்றாரவர்.