மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை- விற்பனை செய்தால் 5 ஆண்டு ஜெயில்!!

cowமும்பை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 1995ஆம் ஆண்டு சிவசேனா- பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது 20 ஆண்டுகாலம் கழித்து இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அந்நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தடைக்கு மாட்டிறைச்சி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தடையால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com

TAGS: