பிகேஆர்: நஜிப்- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் ஆடிப் போயிருக்கிறார்கள்

nik nazmiபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப் பதவி  விலகச்  சொல்வதற்காக  திட்டமிடப்பட்டிருக்கும்  ஆர்ப்பாட்டம் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகக்  கூறும்  பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  மாட்,  அம்னோ  தொகுதித்  தலைவர்கள்  பிரதமருக்கு  ஆதரவாக  நடத்தப் போகும்  கூட்டமே  அதற்குச்  சான்று  என்றார்.

மார்ச் 7  ஆர்ப்பாட்டத்துக்கு  அடுத்த  நாள் பிரதமரைச்  சந்திக்கும்  கூட்டம்  நடைபெறுகிறது.

“எங்கள்  பேரணிக்கு  அடுத்த  நாள் அவர்கள்  கூடுவது  எங்கள்  போராட்டம்  பலனளிக்கத்  தொடங்கியுள்ளது  என்பதைக் காண்பிக்கிறது”.

சனிக்கிழமை  சோகோவுக்கு வெளியில்  ஆர்ப்பாட்டம்  செய்யும் உரிமை  கித்தா   லவானுக்கு  உண்டு  என்பதுபோல்  ஞாயிற்றுக்கிழமை  கூட்டம்  நடத்தும்  உரிமை  அம்னோவுக்கு  உண்டு  என்று  நிக்  நஸ்மி கூறினார்.