போலீஸ் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறியதால் சுகுமாறன் இறந்தார்

suguபோலீஸ்  காவலில்  இருந்த  சி.சுகுமாறனின்  இறப்புக்கு  போலீஸ்தான்  பொறுப்பு  என  மரண  விசாரணை  அதிகாரி  தீர்ப்பளித்துள்ளார்.

சுகுமாறனின் மரணத்தை  விசாரித்த  கொரோனர்  ரோஸி பைனுன்,  காயமடைந்திருந்த  சுகுமாறனை  போலீசார் மருத்துவமனைக்கு  அனுப்பியிருக்க  வேண்டும்  என்றும் சட்டப்படி  செய்திருக்க வேண்டிய  அதை  அவர்கள்  செய்யத்  தவறிவிட்டதாகவும்    கூறினார்.

“அவர்  இருதய  நோயால் இறந்து  போனார். போலீஸ்  தடுத்து  வைத்ததால்  ஏற்பட்ட  மூச்சடைப்பும்  மரணத்துக்குக்  காரணமாக  இருந்திருக்கலாம்  என்பதை  மறுப்பதற்கில்லை”, என்றவர்  தீர்ப்பளித்தார்.

இனி,  சுகுமாறனின்  மரணம்மீது  தேவையான  விசாரணைகளைத்  தொடங்குவது  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்,  போலீஸ்  ஆகியோரின்  பொறுப்பாகும்  என்றாரவர்.

சுகுமாறனின்  கைது  “கொடூரமானது  வழக்கத்துக்கு  மாறானது”  என்பதையும்  அவர்  தீர்ப்பில்  குறிப்பிட்டுள்ளார். மரண விசாரணையில்  சாட்சியமளித்தவர்கள் போலீசார்    இரண்டு  விலங்குகளைக்  கொண்டு  அவரின்  கைகளுக்கு  விலங்கிட்டார்கள்  என்றும்  ஏறி  மிதித்தார்கள்  என்றும்  கூறியதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

39-வயது  பாதுகாவலரான  சுகுமாறனை  காஜாங்கில்  கட்டுக்கடங்காத  வெறி  பிடித்திருந்த  நிலையில்  போலீசார்  பொதுமக்களின்  உதவியுடன்  கைது  செய்தனர்.