மாணவர்களின் மோசமான அடைவுநிலையால் துணைப் பிரதமர் அதிர்ச்சி

shockதுணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்,  மலேசிய  மாணவர்கள்  மேம்பாடடைந்த  நாடுகளின்  மாணவர்கள்போல்  திறமையாக  செயல்படுவதில்லை  என  வருத்தப்படுகிறார்.

2015 பட்ஜெட்டில்  21 விழுக்காடு கல்விக்கு  ஒதுக்கப்பட்டிருக்கிறது  என்று  கூறிய  துணைப் பிரதமர்,  கல்விக்காக  மிக  அதிகமாக  செலவிடும்  நாடுகளில்  மலேசியாவும்  ஒன்று  என்றார்.

“கல்விக்காக  பெரும்பணம்  செலவிட்டும்கூட நம்  மாணவர்களின்  அடைவுநிலை  வளர்ந்த  நாடுகளில்  உள்ளவர்களின்  அளவுக்கு இல்லை  என்பதுதான்  கவலையளிக்கிறது”, என  முகைதின்  தெரிவித்ததாக  ஸ்டார் ஆன்லைன் கூறியது.

அனைத்துலக  மாணவர் மதிப்பீட்டுத்  திட்டம் (பிஸா), அனைத்துலக  கணித, அறிவியல்  ஆய்வு ஆகிய  திட்டங்களில் மலேசிய  மாணவர்களின்  செயல்திறம்  மோசமாக  இருந்தது  பற்றிக்  கல்வி  அமைச்சருமான  முகைதின் கருத்துரைத்தபோது  இவ்வாறு  கூறினார்.