சில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சாட்டையடி!

Tamil school forum 2012தமிழ்ப்பள்ளிகளைத் தாங்கி நிற்கும் ஒரு சில தலைமையாசிரியர்களுக்கு அடியேனின் ஒரு சிறிய மடல். நீங்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை தேசியக் கல்விக் கொள்கையைப் படித்து மீட்டுணர்தல் அவசியம் என்று நான் கருதுகிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள Jasmani Emosi Rohani Sosial (JERI)-யில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளர்த்தத்தை நீங்கள் உணர வேண்டியது காலத்தின் தேவை என்பதை உங்களுக்கெல்லாம் உணர்த்தவே யான் இம்மடலை எழுதுகிறேன்.

Jasmani என்றழைக்கப்படுகின்ற முதன்மைக் கூற்றை உங்களில் பெரும்பாலோர் புறந்தள்ளிவிட்டு விளையாட்டுத் துறையில் நமது மாணவர்களின் பங்களிப்பை ஓரங்கட்டி விட்டீர்கள். இதை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் என்னவென்றால், வருடாந்திர Kejohanan Balapan dan Padang Seremban 1/2015-இல் இவ்வட்டாரத்திலுள்ள நிறைய தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களைக் கலந்து கொள்ள அனுமதிக்காமல் பல காரணங்களைக் கூறி பின்வாங்கி விட்டன. இச்செயல் நியாயமானதா? ஏற்புடையதா?

அடியேனின் கேள்விக்கு உங்கள் பதில்தான் என்ன?

sportsஅதிலும் இழிநிலை என்னவென்றால், மாணவர்களுக்கு முறையான விளையாட்டு உடைகளும் காலணிகளும் வாங்கிக் கொடுக்க உங்கள் பள்ளியின் வங்கிக் கணக்கில் பணமில்லையா அல்லது மனமில்லையா? UPSR தேர்வுக்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரிமையை ஏன் விளையாட்டுக்குக் கொடுக்க முன்வரவில்லை?

இதைக் கேட்பதற்கு ஆசிரிய பெருமக்களுக்கும் திராணியில்லையா?  இம்மடலை யான் எழுதுவதற்கு மற்றொரு காரணியும் உண்டு. கொழுத்தும் வெயிலில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெருங்காலில் ஓடியது எனது மனத்தில் தீராத இரணத்தை உண்டு செய்து விட்டது. உங்களுக்கெல்லாம் உண்மையில் மனதில் வழு இருந்தால் வெருங்காலில் வந்து அங்கு நடந்து பாருங்களேன்!  வெயிலில்தான் நின்று பாருங்களேன்!

உங்களுக்கெல்லாம் தேவை 7A மட்டும் தான். இதைக் கேட்பதற்கு நீ யார் என்றும் நீங்கள் கேட்கலாம்! நெஞ்சுரத்தோடு கூறுவேன் சமூக கடப்பாடும் அக்கறையுமுள்ள யாவரும் கேள்வி கேட்கத் தகுதி படைத்தவர்கள்.

இந்த இழிநிலை மாற வேண்டும், தமிழ்ப்பள்ளி மாணவர்களும் சலைத்தவர்கள் அல்லர் என்பதைப் புடம்போட்டுக் காட்ட வேண்டும்.

– சின்னா.

பட விளக்கம் –  2012 – இல் மலேசியாவை பிரதிநிதித்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட 22 விளையாட்டாளர்களில் ஒரு இந்தியர் தேர்வு செய்யப்பட வில்லை.

(70, 80 களில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நம் தமிழர்கள்/இந்தியர்கள் நட்சத்திரமாய் மின்னினர். இதற்குக் காரணம் தமிழ்ப்பள்ளிகள். ஆனால், இன்றைய நிலைமை? பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகளில் தலைமைத்துவத்திலும் விளையாட்டுத்துறை பொறுப்பிலும் இருப்பவர்கள் பெண்கள். மருந்துக்குக்கூட ஓடி பழக்கமில்லாதவர்கள். எப்படி இருக்கும்… கூறுங்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் 7A க்கள். நிற்க!! ஆசிரியர்களுக்குத் திராணி இல்லையா என்று கேட்கிறீர்கள்!! ஆசிரியர்கள் கள் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் – முணியான்டி)

–       இவை வாட்ஸ்அப் வழி பெறப்பட்டவை