அமார்: ஹுடுட்டை முஸ்லிம்-அல்லாதார் எதிர்க்கவில்லை, எதிர்ப்பது டிஏபி மட்டும்தான்

amarகிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட்  அமார்  நிக்  அப்துல்லா,  நாட்டில்  உள்ள  முஸ்லிம்  அல்லாதார்  ஹுடுட்டை  எதிர்க்கவில்லை  என்றும்  டிஏபி  மட்டும்தான்  எதிர்ப்புக்குரல்  கொடுத்து  சத்தம்  போட்டுக்  கொண்டிருக்கிறது  என்றும்  கூறினார்.

அமார் நேற்று  மலேசியாகினியிடம்  பேசினார்.

“எதிர்ப்புக்  குரல்  கொடுப்பவர்கள்  முஸ்லிம்- அல்லாதவர்கள்  அல்லர். டிஏபி  மட்டுமே. கிளந்தானில்  ஆய்வு  செய்வீர்களானால், முஸ்லிம்-அல்லாதார்  ஹுடுட்டில்   பிரச்னை  இல்லை  என்றுதான்  சொல்வார்கள்.

“சத்தம்  போடுவதெல்லாம்  அரசியல்வாதிகள்தாம்.  ஏனென்றால்  அவர்களுக்கு  அரசியல்  நோக்கம்  உண்டு. முகநூலைப்   பாருங்கள்,  முஸ்லிம்-அல்லாதார்  எத்தனை  பேர்  ஹுடிட்டை  ஆதரிக்கிறார்கள்  என்பது  தெரியும்”, என்றவர்  கூறிக்  கொண்டார்.

மலேசியாகினி  அண்மையில் நடத்திய ஆய்வில்  அம்மாநிலத்தில்  உள்ள  முஸ்லிம்-அல்லாதார்  பலர்  இஸ்லாமிய  குற்றவியல்  சட்டத்தின்  அமலாக்கத்தை  வரவேற்பதாகக்  கூறினர்.