லீ குவான் இயு காலமானார்

 

lkydiesசிங்கப்பூரின் முதல் பிரதமரும் அச்சிறிய நவீன நாட்டின் சிற்பியுமான லீ குவான் இயு இன்று அவரது 91 ஆவது வயதில் காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது மகன் பிரதமர் லீ ஹிசியன் லூங் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவராக லீ இருந்து வந்தார்.

“சிங்கப்பூரின் நிறுவன பிரதமர் லீ குவான் இயு காலமாகி விட்டார் என்பதை பிரதமர் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறார்” என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.