மஸ்லான்: ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் முறையாக கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும்

maslanஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள்  சுங்கத்  துறை வளாகத்தை  முற்றுகை  இடாமல்  இருந்திருந்தால்  அவர்களின்  106  கேள்விகளுக்கும்  விடை  கிடைத்திருக்கும்  என  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  கூறினார்.

“அவர்கள்  முறையாகக்  கேட்டிருந்தால்  அவர்களின்  கேள்விகளுக்கு  விடை  கிடைத்திருக்கும்”. மஸ்லான்  இன்று  புத்ரா  உலக வாணிக  மையத்தில் ஜிஎஸ்டி-க்கும்  மற்ற  விவகாரங்களுக்கும்  விளக்கமளிக்கும்  நிகழ்வு  ஒன்றில்  கலந்துகொண்ட  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

“இடத்தை  முற்றுகை  இடாதீர்கள். முறையாக  வந்திருந்தால் நன்றாக  நடத்தப்பட்டிருப்பீர்கள். சத்தமிட்டுக்  கொண்டு வந்தால்  அது  சட்டவிரோத  ஆர்ப்பாட்டமாகி  விடும்”.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்பதிவு  செய்துகொண்டு  வந்திருக்க  வேண்டும்  என்று  அமைச்சர்  கூறினார்.

“எத்தனையோ  அமைப்புகளைச்  சந்திக்கிறோம். சில  உதவி  கேட்கின்றன. சில ஜிஎஸ்டி  விலக்களிக்க  வேண்டும்  என்கின்றன. எல்லாரிடமும்  நன்றாகத்தான்  நடந்து  கொல்கிறோம்”, என்று  மஸ்லான்  கூறினார்.