விசாரணை படுவேகம், குற்றவாளிக் கூண்டில் ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்கள் 25 பேர்

probeதிங்கள்கிழமை   கிளானா  ஜெயாவில்  உள்ள  கூட்டரசுப்  பிரதேச  சுங்கத்  துறை  வளாகத்தில்  உள்ளமர்வுப்  போராட்டம்  நடத்திய  சமூக  ஆரவலர்களில்  25-பேர்  இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டனர். அவர்கள்  கைதான 48-மணி  நேரத்தில்  இது  நடந்துள்ளது.

2012 அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்  பிரிவு 21(1) (டி)-இன்  கீழும்  அத்துமீறலுக்காக குற்றவியல்  சட்டத்தின்  பிரிவு 447-இன் கீழும்  அவர்கள்மீது  குற்றம்  சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ரிம20,000 வரை  அபராதம்  விதிக்கப்படலாம்.

திங்கள்கிழமை  சுமார்  100  சமூக  ஆர்வலர்கள்  ஜிஎஸ்டி  தொடர்பில்  106  கேள்விகளுக்கு  விடை  தேவை  என்ற  கோரிக்கையுடன்  சுங்கத்  துறை  வளாகத்தை  முற்றுகை  இட்டனர்.  அங்கு  உள்ளமர்வுப்  போராட்டத்திலும்  ஈடுபட்டனர்.. போலீசார் அக்கூட்டத்தைக்  கலைத்ததுடன்  அவர்களில்  82-பேரைக்  கைது  செய்தனர்.