ஐஜிபி-யை விலக்கக் கோரும் அவசரத் தீர்மானம்: பிகேஆர் தாக்கல் செய்தது

bayanபிகேஆர்,  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  நடத்தைப்  பற்றி  விவாதிக்கவும்  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு  எதிராக  அவர்  தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பயன்படுத்துவதற்காக  அவரைப்  பதவி  நீக்கம்  செய்யவும் அவசரத்  தீர்மானமொன்றைப்  பதிவு  செய்திருக்கிறது.

பிகேஆர்  பாயான்  பாரு  எம்பி  சிம்  ட்ஸே  ட்ஸின்  அத்தீர்மானத்தை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாவின்  அலுவலகத்தில்  இன்று  பதிவு  செய்தார்.

“இன்றுவரை,  போலீசார் தேச  நிந்தனைச்  சட்டத்தைப் பயன்படுத்தி,  எம்பிகள், பல்கலைக்கழக  விரிவுரையாளர்கள், மாணவர்கள், சமூக  ஆர்வலர்கள்  என  36 பேரைக் கைது  செய்துள்ளனர், விசாரித்துள்ளனர், குற்றஞ்சாட்டியுள்ளனர்”, என்றவர்  அத்தீர்மானத்தில்  கூறினார்.

காலிட்  தொடர்ந்து  போலீஸ்  படைக்குத்  தலைவராக  இருந்தால் மலேசியாவின்  நற்பெயர் “கெட்டுப்போகும்”  என்றாரவர்.

அத்தீர்மானத்தை விவாதத்துக்கு  அனுமதிப்பதா  வேண்டாமா  என்பதை  பண்டிகார்  நாளை  அல்லது  அடுத்த  வாரம் முடிவு  செய்வார்.