ஐஜிபி: ஹுடுட் மீது சட்ட ரீதியான வாதங்கள் புரியலாம்

khalidஹுடுட்  அரசமைப்புக்கு  ஏற்ப  உள்ளதா  என்று  வாதமிடலாம். அதற்கு  அனுமதியுண்டு  ஆனால், ஹுடுட்  சட்டம்  பற்றி  விவாதிப்பதற்கு அனுமதியில்லை  என்கிறார் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்.

“இஸ்லாமிய  சட்ட  விவகாரங்கள்  பற்றிக்  கருத்துச்  சொல்லக்  கூடாது. அது  அரசமைப்புக்கு  ஏற்புடையதா  என்று விவாதிக்கலாம். பிரச்னையில்லை.

“ஆனால், ஹுடுட்  சட்டம்  பற்றிப்  பேசுவது,  அது  நியாயமற்ற  சட்டம்  என்று  சொல்வது கூடாது. அது  அச்சட்டம்  பற்றிக் கேள்வி எழுப்புவதாகும்”.

இது  இஸ்லாத்துக்கு  மட்டுமல்ல  எல்லாச் சமயங்களுக்கும்  பொருந்தும்  என காலிட்  கூறினார்.

“எந்தச்  சமயத்தைப்  பற்றியும்  கேள்வி எழுப்பக்  கூடாது. எழுப்பினால்  நடவடிக்கை  எடுப்போம்”, என்றார்.