ஹாடியின் புதல்வர்: ஹுடுட் காட்டுமிராண்டித்தனம் என்றால், தூக்குத்தண்டனையை என்னவென்பது?

sonஹுடுட்  சட்டவரைவைக் கொண்டுவர  முயலும் பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கைக்  குறைகூறுவோரை  அவரின்  மகன்  முகம்மட்  காலில்  சாடியுள்ளார்.

பாஸ்  இளைஞர்  துணைத்  தலைவருமான  அவர்,  உலக  முழுவதும்  பரவி  நிற்கும் “இஸ்லாமோபோபியா”வின் ஒரு  பகுதிதான் இந்த “ஹுடுட்போபியா”  என்றாரவர்.

“ஹுடுட் காட்டுமிராண்டித்தனமானது  மனித  உரிமைகளை மீறுகிறது  என்ற அடிப்படையில்  அதைக்  கண்டிப்பவர்கள்.  தூக்கில் போடுவதன் மூலமாகவும்  மின்சார  நாற்காலி  மூலமாகவும் மரண  தண்டனை கொடுப்பதை   ஏற்றுக்கொள்வது  வியப்பாக உள்ளது.

“சிலர்  அதற்கு  இது  சரியான  நேரமல்ல  என்று  கூறி  ஏற்க  மற்க்கிறார்கள். அப்படியானால், எதுதான்  சரியான  நேரம்?”, என்றவர்  வினவினார்.