ரிம300 மில்லியனில் டிபிகேஎல் புதிய தலைமையகமா? எம்பி எதிர்ப்பு

dbklகோலாலும்பூர்  மாநகராட்சி  மன்ற(டிபிகேஎல்)த்துக்கு ரிம300 மில்லியனில்  புதிய  தலைமையகக்  கட்டிடம்  கட்டுவதற்கு  கூட்டரசுப்  பிரதேச  எம்பி  ஒருவர்  எதிர்ப்புத்  தெரிவிக்கிறார்.

“இது கிறுக்குத்தனம். எதற்காக  ஊராட்சி  மன்றத்தின்  புதிய  கட்டிடத்துக்கு  இவ்வளவு  செலவிட  வேண்டும்?

“இந்தப்  பணத்தை  வைத்து  அதிகமான  மலிவு-விலை  அடுக்குமாடி  வீடுகள்  கட்டுவது  நல்லதல்லவா”, என்று  சீபூத்தே  எம்பி  தெரேசா  கொக்  முகநூலில்  குறிப்பிட்டிருந்தார்.