முகமது நபி குறித்த ஈரான் திரைப்படத்தால் சர்ச்சை

Islamமுகமது நபியின் இளம்பிராயம் குறித்த ஈரானியத் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் புனித நூலான குரானில் இடம் பெற்றுள்ள முகமது நபியின் இளம்பிராய வாழ்க்கை வரலாறு, “முகமது: இறைவனின் தூதர்’ என்ற தலைப்பில் ஈரானில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த நாட்டின் அல்லாயர் என்ற கிராமத்தில், ஏராளமான பொருள் செலவில் மெக்கா நகரைப் போலவே “செட்’ அமைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் முகமது நபியின் உருவம் காண்பிக்கப்படாமல், பிற கதாப்பாத்திரங்களின் மூலம் அவரது வரலாறு விளக்கப்படுகிறது.

எனினும், திரைப்படத்தில் முகமது நபி, பின்புறமாக காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால், முஸ்லிம்களின் ஒரு பிரிவினரிடையே இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

முகமது நபியின் புற வடிவத்தை படமாக வெளியிடுவதற்கு பெரும்பாலான மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“முகமது’ படத்துக்கு உலகின் பிற பகுதிகளிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், அந்த நாட்டிலேயே மிகப் பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் வெளியிடப்படுவது கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com