பாஸ் உதவித் தலைவர்: ஹாடியின் ஹுடுட்டில் பிரம்படி மட்டுமே இருக்கும்

veepபாஸ் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  தாக்கல்  செய்யவுள்ள தனி  உறுப்பினர்  சட்டவரைவில்  ஹுடுட் தண்டனைகள்  பிரம்படிகள்  என்ற  அளவில்தான் இருக்கும்  என்கிறார்   பாஸ்  உதவித்  தலைவர்  ஹுஸாம்.

‘ஸினா’ (திருமணத்துக்கு முந்திய பாலுறவு), மது  அருந்துதல், ‘கசாவ்’(ஒருவர் ஸினா குற்றம் செய்ததாகக் குற்றஞ்சாட்டுதல்)  ஆகிய  குற்றங்களுக்கு மட்டுமே இஸ்லாமிய  குற்றவியல்  சட்டப்படி  தண்டனை வழங்க  அது  முற்படுகிறது  என்றார்.

“அக்குற்றங்களுக்கும் பிரம்படி  மட்டுமே  கொடுக்கப்படும். கையை  வெட்டுவதெல்லாம்  கிடையாது”, என  ஹுஸாம்  நேற்றிரவு  ஷா ஆலமில்  கூறினார்.

“கிளந்தான்  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில்  பல   தண்டனைகள்  உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம்  அமல்படுத்த இயலாது”, என்றாரவர்.  அதாவது  கல்லெறிதல், கை, கால்களை  வெட்டுதல், சிலுவையில்  அறைதல்  போன்ற தண்டனைகள்  கிடையாதாம்.