கிட் சியாங்: 14வது பொதுத் தேர்தலில் பாஸ் துடைத்தொழிக்கப்படலாம்

kitபாஸ், ஹுடுட் சட்டத்தில்  பிடிவாதமாக  இருப்பதன்  காரணமாக  அடுத்த  பொதுத் தேர்தலில் துடைத்தொழிக்கப்படலாம்  என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  எச்சரிக்கிறார்.

வடக்கத்தி  மாநிலங்கள்  சிலவற்றில்  வேண்டுமானால் அது  பேர்  போட்டுக்  கொண்டிருக்கலாம். ஆனால், அதன்  கோட்டையாக  திகழும்  கிளந்தானில்கூட  அக்கட்சி  ஆட்சியை  இழக்க  நேரலாம்  என்று  லிம்  கூறினார்.

ஹுடுட்டின்  காரணமாக  பக்கத்தான்  ரக்யாட்  உடைவது  மூன்று  உறுப்புக்  கட்சிகளுக்குமே  பாதிப்பைக்  கொண்டுவரும்  என்று  கேலாங்  பாத்தா  எம்பியான  லிம்  சொன்னார். ஆனால், பாஸ்தான் அதிகமாக  பாதிக்கப்படும்.

“30 விழுக்காடு  முஸ்லிம்-அல்லாதார்  வாக்குகளை  இழப்பதால்  பாஸ், 2013-இல்  வெற்றிபெற்ற  ஏழு  நாடாளுமன்ற  இடங்களையும்  29 சட்டமன்ற  இடங்களையும்  இழக்கும்.

“ஜோகூர், பேராக், மலாக்கா ஆகியவற்றில்  அது  முற்றாக  துடைத்தொழிக்கப்படும். சிலாங்கூர்,  பகாங்,  கெடா ஆகியவற்றில் கிட்டதட்ட  இல்லாமல்  போய்விடும்”, என்று  லிம்  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.