ஹுடுட்டால் பக்கத்தான் உடைந்து போகும் என எதிர்பார்க்கிறார் அமைச்சர்

nazஅம்னோ  மூத்த  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ் ஹுடுட்டால்  பக்கத்தான்  ரக்யாட்  உடைந்து  போவதைக்  காண  ஆவலாக  உள்ளார்.

“ஹுடுட்  விவகாரத்தால்  பக்கத்தான்  உடையும்  என்றால்  அப்படியே  நடக்கட்டும்”, என்றவர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

ஆனால், கடந்த  வாரம்  நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில்  ஹுடுட்  பற்றி  விவாதிக்கப்படவில்லை என்பதையும்  நஸ்ரி  தெரிவித்தார்.

கிளந்தானில்  ஹுடுட்டை  நடைமுறைப்படுத்த  பாஸ் தலைவர்  அப்துல் ஹாடி  ஆவாங்  தனி  உறுப்பினர்  சட்டவரைவை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யும்போது  அதன்மீது எப்படி வாக்களிப்பது  என்று  பிஎன்  இன்னும்  முடிவு  செய்யவில்லை.