மலையக, தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம்!

mano-groupமலையகம் மற்றும் தெற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளன.

வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதி தமிழ் வாக்காளர்களை இலக்கு வைத்து இந்த கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் செயற்படுவதனைப் போன்றே நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த கூட்டணி செயற்படத் திட்டமிட்டுள்ளது.

தெற்கு மற்றும் மலையக அரசியல்வாதிகளுக்கு இடையில் இந்தக் கூட்டணி அமைப்பது குறித்த ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தைகள் பூர்த்தியாகியுள்ளன.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதனைப் போன்று நாட்டின் ஏனைய பகுதிகளில் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு கூடுதல் அரசியல் செல்வாக்கினைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாடாளுமன்றில் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக மாறுவதே இந்த புதிய கூட்டணியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: