மியான்மர் அரசு – கிளர்ச்சியாளர்கள் இடையே வரைவு ஒப்பந்தம்

burmaமியான்மர் நாட்டில் அரசுக்கும், 16 கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை வரைவு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசுக்கு எதிராக ஆயுதக் குழுவினர் நடத்தி வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக மியான்மர் அதிபர் தெயின் சேயின் கூறுகையில், “அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைக்கும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இதுகுறித்து மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

மியான்மரில் பலம் வாய்ந்த ஆயுதக் குழுவாகக் கருதப்படும் காசின் விடுதலை ராணுவ இயக்கத்தினரும் இந்த வரைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

-http://www.dinamani.com