ஏமனில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள் மீட்பு: அனைவரையும் மீட்க தீவிரம்

yemenபுதுடில்லி: ஏமனில் சிக்கியுள்ள 4 ஆயிரம் இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக ஏடன் துறைமுகத்தில் இருந்து 350 இந்தியர்கள் கடல் மார்க்கமாக மீட்கபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய அதிபர் அபெட்ரபோ மன்சூரின் ஹாதி ஆதராளவர்களுக்கும் , முன்னாள் அதிபர் அலிஅப்துல்லா சலே ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போர் நிலவியுள்ளது. இதில் ஹாதி படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியா கூட்டுபடைகள் வான் தாக்குதல் நடத்திவருகின்றன.

இந்நிலையில் ஏமனில் 4000 இந்தியர்கள் பல்வேறு மாகாணங்களில் உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் செவிலியர்கள் ஆவர். இவர்களை மீட்க ஐ.என்.எஸ்.கவரத்தி, கோரல்ஸ், மற்றும் ஐ.என்.எஸ். சுமித்ரா, உள்ளிட்ட போர்க் கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் மூலம் பல்வேறு குழுக்கள் அமைத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத்அக்பருதீன் கூறுகையில், ஏமனில் சிகியுள்ளவர்கள் மீட்க முதற்கட்டமாக ஐ.என்.எஸ்.சுமித்ரா கப்பல் ஏடன் துறைமுகம் சென்றடைந்தது. அங்கு 350 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் எஞ்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.dinamalar.com

 

TAGS: