மேகதாது அணைக்கு அனுமதியா?

prakash“காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கோரிக்கை ஏதும் வரவில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி, புதிய அணையை கட்டுவது, சாத்தியமில்லாத ஒன்று,” என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

கர்நாடகாவில் உள்ள, மேகதாது என்ற இடத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே, புதிய அணையை கட்டும் நடவடிக்கைகளில், அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு, தமிழகத்தில், கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேகதாதுவில், அணை கட்டப்பட்டால், தமிழகத்தில், காவிரி நீர்ப்பாசன விளை நிலங்கள் உள்ள, தஞ்சை பகுதி முழுவதும், பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுநல அமைப்புகள் என, அனைத்து தரப்பும், ஒருமித்த குரலில், எதிர்ப்பை காட்டி வருகின்றன.

இந்நிலையில், நேற்று டில்லியில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கு, மத்திய அரசின் சார்பில், அனுமதி ஏதும் வழங்கப்பட வில்லை. அதுபோன்ற அனுமதியை கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு, கர்நாடகா தரப்பில் இருந்து, கோரிக்கை ஏதும் வரவில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி, புதிய அணையை, கர்நாடக அரசு கட்டுவது என்பது, சாத்தியமில்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: