அன்வாரின் முயற்சியால் பால் கிடைக்கிறது, கொசுத் தொல்லை குறைந்தது

milkஇரண்டு  மாதங்களாக  சுங்கை  பூலோ  சிறையில்  இருந்துவரும்  அன்வார் இப்ராகிம்  அச்சிறைச்சாலையில்  சில ‘சீரமைப்புகளை’க்  கொண்டு  வந்திருக்கிறார்.

இப்போது  அங்கு  சிறையில்  இருப்பவர்களுக்கு  வாரத்துக்கு  மூன்று  தடவை  பால்  கொடுக்கப்படுகிறது. இதற்குமுன் கைதிகளின்  உணவுப் பட்டியலில்  பால்  இடம்பெற்றிருக்கவில்லை. கொசுக்களின்  எண்ணிக்கையும்  குறைந்துள்ளது.

சிறையில்  கொசுத் தொல்லை இருப்பதைக்  கைதிகள்  மூலமாக  தெரிந்துகொண்ட  அன்வார், அதைத்  தம்  வழக்குரைஞர்கள்  வழி  மந்திரி  புசார்  அஸ்மினிடம்  தெரிவித்தார்.

மந்திரி  புசார், அவ்வட்டாரத்தில்  கொசு  ஒழிப்பு  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  ஊராட்சி  மன்றத்தைப்  பணித்தார்.

“அதன்  விளைவாக  இப்போது  கொசுத்  தொல்லை  குறைந்துள்ளது”, என வழக்குரைஞர்  லத்திபா  கோயா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.