தொழிலாளர் தினத்தில் ஜிஎஸ்டி-க்கு எதிராக கித்தா லவான் பேரணி

kita laகித்தா  லவான்,  தொழிலாளர்  தினமான  மே  முதல்  நாளில்   பொருள்,  சேவை  வரிக்கு  எதிரான பேரணி  ஒன்றை  ஏற்பாடு  செய்கிறது.

இது, அவ்வமைப்பு, பிப்ரவரி 10-இல்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சிறையிடப்பட்டதிலிருந்து  நடத்தும்  மூன்றாவது  பேரணியாகும்.

“அரசியல்வாதிகள், கல்விமான்கள், வழக்குரைஞர்கள், சமூக  ஆர்வலர்கள், செய்தியாளர்கள்  என  120-க்கு  மேற்பட்டோர்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

”ஆனால், இளைஞர்கள்  அஞ்சவில்லை, இப்போதைய  நிலை  மாறும்  என்ற  நம்பிக்கையை  மக்களுக்குக்  கொடுப்பதற்காக  அவர்கள்  தொடர்ந்து  இதுபோன்ற  பேரணியை  நடத்திக்  கொண்டிருப்பார்கள்”, என  கித்தா  லவான்  செயலகம்  விடுத்த  அறிக்கை ஒன்று  கூறிற்று.

மக்கள்  வெறுமனே  குறை கூறிக்  கொண்டிருக்காமல்  “எதிர்த்துப்  போராட”  மே  முதல் நாள் கித்தா  லவான்  பேரணியில்  கலந்துகொள்ள  கோலாலும்பூர்  வர வேண்டும்  என்றும்  அது கேட்டுக்கொண்டது.