தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்பட 30 நாடுகள் கூட்டணி

islamic-terroristதீவிரவாதத்தை ஒடுக்கும் நோக்கில், இந்தியா, பாகிஸ்தான் உள்பட 30 நாடுகள் இணைந்து, ஐ.நா.வில் குழு ஒன்றை உருவாக்கியுள்ளன.

“தீவிரவாத்துக்கு எதிரான நண்பர்கள் குழு’ என்ற இந்தக் குழுவானது, ஐ.நா.வில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டதாக, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, சவூதி அரேபியா உள்ளிட்ட ஆசிய நாடுகள், மொராக்கோ, எத்தியோப்பியா, எகிப்து உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகள், நார்வே, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 30 நாடுகள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளன.

தீவிரவாதத்துக்கு எதிரான ஐ.நா.வின் முயற்சிகளையும், பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த குழு செயல்படும் என ஐ.நா.வுக்கான மொராக்கோ நாட்டின் நிரந்தரப் பிரதிநிதி ஒமர் ஹிலால் தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: