கொத்துக் கொத்தாய் மடிந்துவிழும் மகாராஷ்டிரா குழந்தைகள் – காரணம் “ஊட்டச்சத்து குறைபாடு”!

childமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் வித்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் 197 குழந்தைகள் மரணம் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் குழந்தைகளி்ன் மரண எண்ணிக்கை 286 ஆக இருந்தது எனவும் அவை 2014இல் 497 ஆக அதி்கரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இவ்விஷயத்தில் மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வந்த போதிலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தை மரணங்களை தடுக்க முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.com

TAGS: