நஜிப்: அல்தான் துயாவை எனக்குத் தெரியாது என்று சத்தியம் செய்திருக்கிறேன்

 

Najibnonot12006 ஆம் ஆண்டில் மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை செய்யப்பட்டதில் தமக்கு சம்பந்தமில்லை என்பதை பிரதமர் நஜிப் இன்று (ஏப்ரல் 9) பகிரங்கமாக வலியுறுத்தினார்.

அல்தான்துயாவை கொலை செய்ய நஜிப்பின் பாதுகாப்பாளராக பணியாற்றிய போலீஸ் சிறப்பு கொமாண்டோவான சிருல் அஸார் ஒமாருக்கு யார் உத்தரவிட்டது என்று கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கேட்டிருந்தார்.

அக்கேள்விக்கு பதில் அளித்த நஜிப், “இந்தக் கதை 2008 (கூறியபடி) ஆம் ஆண்டிலிருந்து, பழையகாலத்தியது. எனக்கு அல்தான் துயாவை தெரியாது மற்றும் நான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்படவில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். மற்றும் போலீசார் விசாரணை செய்துள்ளனர்”, என்று அவர் கூறினார்.

Najibnonot2“எனக்கு அல்தான் துயாவை தெரியும் என்பதற்கு சாட்சியமே இல்லை. ஒன்றுமே இல்லை, படங்கள் இல்லை, எழுதித்தில் எதுவும் இல்லை, சாட்சிகள் இல்லை, மற்றதெல்லாம்.

“நீதிமன்ற நடவடிக்கை பெடரல் உச்சநீதிமன்றம் வரையில் சென்றது. நீதிமன்றத்தில் நேர்மை பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?”, என்று நஜிப் கேட்டார்.

நஜிப் இவற்றை டிவி3 முன்னதாக பதிவு செய்திருந்த நேர்காணலில் கூறினார். அது நேற்று இரவு மணி 10.00 க்கு ஒளிபரப்பப்பட்டது.

மகாதிரின் கேள்வி எழுப்பப்படவில்லை

இந்த நேர்காணலை நடத்தியவர் மகாதிரின் முக்கியமான கேள்வியை நஜிப்பிடம் கேட்கவில்லை. கொலை நடந்த சமயத்தில் நஜிப்பின் பாதுகாப்பு வட்டத்தில் பணியாற்றிய அந்த இரு போலீஸ் கொமாண்டோகளுக்கு அந்தான்துயாவை கொல்ல யார் உத்தரவிட்டது என்பதுதான் அக்கேள்வி.