இந்திராணியின் ஆவணப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது

 

Indira1மலேசியரும் உலகத் தரம் வாய்ந்தவற்றை தயாரிக்க முடியும் என்பதை நிருபிக்கிறார் மலேசியாகினி வீடியோ பிரிவின் முன்னாள் பணியாளரான இந்திராணி கோபால்.

இந்திராவின் முதல் தயாரிப்பு உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரது “The Game Changer” என்ற ஆவணப் படம் அவ்விழாவில் திரையிடப்படும்.

அப்படத்தின் கதையில் சூசன் சுலோட்னிக் என்பவர் அமெரிக்கா, நியுயோர்க் வூட்பர்ன்ஸ் சீர்திருத்தக்கூடத்தில் வைக்கப்பட்டிருப்பவர்களின் மறுவாழ்வுக்கு நடனத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்.

நியுயோர்க், ஹோப்ஸ்டிரா பல்கலைக்கழக புல்பிரைட் மாணவரான இந்திரா, கடந்த ஏழு ஆண்டுகளாக சிறைக்கைதிகளைத் திருத்தி சிறைக்கு வெளியில் அவர்களை நல்வாழ்க்கைக்கு தயார்படுத்த சுலோட்னிக் கையாண்ட முறையை ஆவணப்படமாக தயாரித்தார்.

இந்த ஆவணப்படம் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத வகையில் 14 திரைப்பட விழாக்களுக்கு, இப்போது நடைபெறவிருக்கும் உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா உட்பட, தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

 

கேன்ஸ் தயாரிப்பாளர்களின் கனவு

 

Indira2“கேன்ஸ் ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளரின் கனவாகும்” என்று கூறிய இந்திரா, ஒரு பெரிய விழாவில் தாம் ஒரு சிறு பிரிவில் மட்டுமே பங்கேற்கிறேன் என்றார்.

இந்த விழாவின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தாம் தேர்வு பெற்றிருப்பது தமது எதிர்காலத்திற்கான முதல்படியாக அமையும் என்றாரவர்.

மலேசியாகினி அதன் டிவி பிரிவை 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய போது இந்திரா அதன் முதல் பணியாளர்களில் ஒருவராவார். அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் டிவி செய்தி தயாரிப்பில் பங்கேற்றார். அதன் வழி மலேசியாகினி டிவி மிக உயர்ந்த வீடியோ செய்தி தளமாக வளர்ச்சியடைந்ததற்கு உதவினார்.

சுருக்கமான செய்தி பகுதிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கையில் இந்திரா அவரது முதல் விருதை 2007 ஆம் ஆண்டில் சுதந்திர திரைப்பட விழாவில் பெற்றார். “She is my son” என்ற தலைப்பைக் கொண்ட அவரது அந்த ஆவணப் படத்தை யுடியூப்பில் இதுவரையில் 2.2 மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன.

 

 

இந்திராவின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே

 

இந்திராவின் வெற்றியை தாம் எதிர்பார்த்ததாக மலேசியாகினியின் டிவி பிரிவுக்கு அப்போது தலைமையேற்றிருந்த சுபியன் ஷுகுர் கூறினார்.

“தமது கதையின் பொருளோடு இணைந்துவிடும் தனித்தன்மை இந்திராணிக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன்.

“அவரது தயாரிப்பு இப்போது கேன்ஸ் விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது எனக்கு வியப்பை அளிக்கவில்லை, ஏனென்றால்Indira3 திரைப்பட தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் அங்கு சென்றடைவார், அல்லது சன்டான்ஸ் அல்லது இரண்டு விழாக்களிலும் பங்கேற்பார் என்பதை எப்போதும் நான் எதிர்பார்த்தேன். அவர் நமக்கு பெருமை சேர்ப்பார்”, என்று சுபியன் மேலும் கூறினார்.

கோலாலம்பூர், செந்தூலில் பிறந்த இந்திராணி, ஸ்தாபாக் ஆயர் பனாஸ் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். மலேசியாகினியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், மலேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பல்லூடக தொடர்பு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தமக்கு எவ்விதத் தடங்களும் ஏற்படுத்தாமல், உதவிகள் அளித்த மலேசியாகினியின் சுபியன் ஷுகுர், பிரமேஷ் சந்திரன் மற்றும் ஸ்டீபன் கான் ஆகியோருக்கு  இந்திராணி நன்றி கூறினார்.

 

இந்திராணிக்கு உதவுவோம்

 

மலேசியாகினியின் தலைமை நிருவாகி என்ற முறையில் இந்திராணி குறித்து நாங்கள் அளவற்ற பெருமைப்படுவதாக பிரமேஷ் கூறினார்.
வாய்ப்பு கிடைத்தால் மலேசியர்கள் என்ன செய்ய முடியும் என்பதை அவர் உலகிற்கு காட்டியுள்ளார். அவர் நாடு திரும்பி, மலேசியாவின் திரைப்படத் துறையை வலுப்படுத்த உதவுவார் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

புகழ் மிக்க ஆவணப்பட தயாரிப்பாளர் இந்திராணிக்கு உதவி தேவைப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ்சிற்கு செல்ல அவருக்கு அமெரிக்கIndira4 டாலர் 5,000 (ரிம18,5120) தேவைப்படுகிறது. அவர் அங்கு செல்வதற்கு, சாத்தியமான கோலாலம்பூர் இடைவேளை வருகை உட்பட, மலேசியாகினி நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொன்டுள்ளது.

“இந்திராணி நமது ஆதரவைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். அவரை கேன்ஸுக்கு அனுப்பி வைக்க உதவுமாறு நாம் நமது வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று பிரமேஷ் சந்திரன் வேண்டிக்கொண்டார்.

இந்திராணி மே மாதம் கேன்ஸுக்கு செல்ல உதவி அளிக்க விரும்பும் வாசகர்கள் அவர்களின் நன்கொடையை கீழ்க்கண்ட மலேசியகினியின் வங்கி கணக்கில் சேர்க்கலாம்:

Account name: Mkini Dotcom Sdn Bhd
Bank: Maybank
Account No: 514178153586
Branch: Seapark, Petaling Jaya
Swift: MBBEMYKL

பணம் செலுத்தியதற்கான விபரங்களின் நகலை தயவு செய்து [email protected] அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அது நிதி பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி தெரிவிக்க உதவியாக இருக்கும்.