இலங்கையின் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் துறைமுகத்துக்கு செல்லும் சீன நீர்மூழ்கிகள்

csubmarineசீனாவின் நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

இதனையடுத்து சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் வருகை மற்றும் பராமரிப்பு, விநியோகம் என்பவற்றை பாகிஸ்தானின் க்வாடர் துறைமுகம் (Gwadar port) பொறுப்பேற்றுள்ளது. இந்த தகவலை பிடிஐ வெளியிட்டுள்ளது.

இந்த நகர்வு சீனாவை பொறுத்தவரை முக்கியமான ஒன்று என்று சங்காய் நிறுவக தென்னாசிய கற்கை நெறிகளுக்கான பணிப்பாளர் ஸாவோ கன்சேங் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் க்வாடார் துறைமுகம் இனிவரும் காலங்களில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருட்களை ஏற்றி இறக்கும் முக்கிய துறைமுகமாக மாற்றமடையும் என்று கன்சேங் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவின் சியான்ஜிங் பிராந்தியத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானால் கையடகப்படுத்தப்பட்டுள்ள காஸ்மீர் பிராந்தியம் ஊடக க்வாடர் துறைமுகம் இணைக்கப்படவுள்ளதாக கன்சேங் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மலை சார்ந்த பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாத செயல்களால் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று சீனாவின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் க்வாடர் துறைமுக பிரதேசத்தில் நீர்பற்றாக்குறை மற்றும் நிர்மாணங்கள், போக்குவரத்து, தொழிலாளர்களின் வெற்றிடங்கள் என்பன சீனாவின் முயற்சிக்கு தடையாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.

இருப்பினும் பாகிஸ்தான் – சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை நோக்காகக் கொண்டு இந்த துறைமுகத்தில் சீன நிறுவனம் ஒன்று இந்த மாதத்தில் இருந்து நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

-http://www.tamilcnnlk.com

china submaraine

TAGS: