இணையத்தில் படிப்பதை எல்லாம் நம்பி விடாதீர்கள்: நஜிப்

pnfoபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சமூக  வலைத்தளங்களில்  வரும்  குற்றச்சாட்டுகள்  உண்மையாக  இருப்பதில்லை  என்று எச்சரிக்கிறார்.

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்   இணையத்தில்  பதிவேற்றம்  செய்த  பல காணொளிகளில்  கடுமையாக  தாக்குதல்  நடத்தி  இருப்பதை  அடுத்து  நஜிப்  தம்  வலைப்பதிவில் இவ்வாறு  கூறியுள்ளார்.

“பல  தகவல்கள்  பெரிதுபடுத்தப்பட்டுத்  திரித்துக்  கூறப்பட்டிருப்பதால்  அவற்றைப்  புரிந்து கொள்ள  முடிவதில்லை”, என்றாரவர்.

தகவல்  யுகத்தில் சமூக  வலைத்தளங்களால்  “தகவல்  ஜனநாயகம்” வந்து  வாய்த்துள்ளது.

இந்தத்  ‘தகவல்  ஜனநாயகத்தால்’ நன்மையும்  உண்டு  தீமையும்  உண்டு. ஏனென்றால்  பொய்யான  தகவல்களைக்கூட  பரப்ப  முடியும்”, என்று  நஜிப்  கூறினார்.

மக்கள்தாம்  விவேகமாக  நடந்துகொள்ள  வேண்டும். தப்பான தகவல்களைக்  கண்டு  ஏமாந்து போகக் கூடாது   என்றவர்  வலியுறுத்தினார்.