டோல் கட்டணம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆனால், கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது

tollபத்து  தீகா,  சுங்கை  ராசாவ்  சாலைக்கட்டண  வசூலிப்பு  2038வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதை  உறுதிப்படுத்திய  பிளஸ்  மலேசியா  நிறுவனம்,   சாலை  பயனர்கள்  இப்போது  சாலைக்  கட்டணத்தில்  பாதியைதான்  செலுத்தி  வருகிறார்கள்  என்பதையும்  வலியுறுத்தியது.

2018-இல்  முடிவடைவதாக  இருந்த  கூட்டரசு  நெடுஞ்சாலை 2வது வழித்தடத்துக்கான  சாலைக்கட்டண  வசூலிப்பு,  2011-இல்  கட்டணக் குறைப்புடன்  மேலும்  இருபதாண்டுகளுக்கு  நீட்டிக்கப்பட்டதாக   அந்நிறுவனம்  மலேசியாகினியிடம்  தெரிவித்தது.

“2018-இல்  முடிவடையும்  ஒப்பந்தத்தைப்  பயன்படுத்துவதாக இருந்தால்  இப்போது  பத்து  தீகாவில்  சாலைக்கட்டணம்  ரிம2.40 ஆக  இருக்கும். ஆனால், அங்கு  இப்போது  சாலைக்கட்டணம் ரிம1.10 தான். 2005-திலிருந்து இதில்  மாற்றமில்லை”, என்று  அது  கூறிற்று.