‘இனவாத’ ஜிஎஸ்டி கருத்தரங்குக்கு எதிராக அம்னோ இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்வர்

khaiulகுளுவாங்கில்  இன்றிரவு டிஏபி  பிரதிநிதிகள் கலந்துகொள்ளும்  ஒரு  கருத்தரங்கம்  “இனவாதமிக்கது”  என்பதால்  அம்னோ  இளைஞர்கள்  அதை எதிர்த்து  ஆர்ப்பாட்டம்  செய்வர்.

பொருள்  சேவை  வரி  மற்றும்  இன  அரசியல்  மீதான  அக்கருத்தரங்கில்  செனாய்,  மெங்கிபோல்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  உள்பட  டிஏபி-இன்  நான்கு  பேச்சாளர்கள்  கலந்துகொள்கிறார்கள்.

“டிஏபி இன  அடிப்படையில் வாதம்  நடத்துவதைக்  கைவிட  வேண்டும்  என  குளுவாங்  அம்னோ  இளைஞர்கள்  விரும்புகிறார்கள்.

“ஜிஎஸ்டி  பற்றி  விவாதிக்க  வேண்டுமா, தாராளமாக  செய்யுங்கள். ஆனால், இனவாதத்துடன்  தொடர்புப்  படுத்தாதீர்கள்”. மலேசியாகினி  தொடர்புகொண்டபோது  ஜோகூர்  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைருல்  அன்வார்  ரஹ்மாட்  இவ்வாறு  கூறினார்.

“அரசியல்  கருத்துவேறுபாடுகள்  இருக்கலாம். அதற்காக இன  உணர்வுகளைத்  தூண்டிவிடக்கூடாது, அது நல்லிணக்கத்தைக்  கெடுக்கும்”, என்றாரவர்.

ஆர்ப்பாட்டத்தின்போது  கைருல்  அன்வாரும்  அங்கிருப்பார். அவர்  ஆர்ப்பாட்டம்  கட்டுமீறிச் செல்லாமல்  பார்த்துக்கொள்வார்.