மகாதிர்: 1எம்டிபி-இல் ரிம27 பில்லியனைக் காணவில்லை

matg1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  செய்த  கொள்முதல்களையெல்லாம்  கணக்கிடும்  சிரமமான  பணியை  மேற்கொண்ட  டாக்டர்  மகாதிர்  முகம்மட் ரிம27 பில்லியனுக்குக்  கணக்கில்லை  என்கிறார்.

“தெரிந்த  கொள்முதல்களைக்  கூட்டிப்  பார்த்தால்  ரிம14.7 பில்லியன்  வருகிறது. மீதமிருப்பது  ரிம27 பில்லியன்.

“ஒரு  பில்லியனுக்குமேல்   பெட்ரோ  சவூதிக்கு,  அந்நிறுவனத்தின்  மதிப்பையோ அதன்  சொத்துகளையோ சரிபார்த்துக்  கொள்ளாமல்  கொடுக்கப்பட்டதாகக்  கூறப்படுகிறது.

“மீதமுள்ள  பணம்  எங்கே?”, என்று  மகாதிர் அவரது  மிக  அண்மைய  வலைப்பதிவில்  வினவியுள்ளார்.

1எம்டிபி செய்த  கொள்முதல்களை  மகாதிர்  பட்டியலிட்டுள்ளார்:

1) Tanjong Energy (இப்போது  Powertek Energy Sdn Bhd) – ரிம8.5 பில்லியன்

2)Genting Sanyan Power (இப்போது Kuala Langat Power Plant) – ரிம2.3 பில்லியன்

3)Jimah Energy – RM1.2 பில்லியன்

4) ஜாலான்  துன்  ரசாக்கில்  (துன் ரசாக்  இணைப்பகத்திற்கு)  நிலம் வாங்கியது – ரிம320 மில்லியன்

5)முன்னாள் சுங்கை  பீசி அரச  ஆகாயப்படை  விமான  நிலையத்தில் (இப்போது  பண்டார்  மலேசியா) 495  ஏக்கர்  நிலம்  வாங்கியது  – ரிம 363.5 மில்லியன்

6)பினாங்கு  ஆயர்  ஈத்தாமில் 234   ஏக்கர் நிலம் வாங்கியது – ரிம1.38 பில்லியன்.

இவை  தவிர,  1எம்டிபி-க்கு  நிலத்தைக்  குறைந்த  விலைக்கு  விற்ற  வகையில்   அரசாங்கத்துக்கு ஏற்பட்ட  இழப்பு  கிட்டதட்ட ரிம25 பில்லியன்  என்றும்  மகாதிர்  கூறினார்.