கைரி:நஜிப்பைக் கவிழ்க்கும் சதியில் தொடர்பில்லை

respondஅம்னோ  இளைஞர் தலைவர்  கைரி  ஜமாலுடின். அப் பிரிவு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்க  சதித்திட்டம்  தீட்டுகிறது  என்பதையும் அதில்  அவருக்கும்  தொடர்புண்டு  என்று கூறப்படுவதையும்  மறுக்கிறார்.

“நான்  ஆண்பிள்ளை. யாரையும்  கவிழ்க்க கையாட்கள்  எனக்குத்  தேவையில்லை”, என்று  புக்கிட்  மெர்தாஜாமில், பெர்மாத்தாங்  பாவ் இடைத்  தேர்தல்  வேட்புமனு  தாக்கல்  மையத்தில்  கைரி  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“நான்  எதையும்  நேரடியாக செய்கிறவன். அப்படி  ஒன்றைச்  செய்ய விரும்பினால்  அதை  நானேதான்  செய்வேன்”,என்றாரவர்.

அம்னோ  தொடர்புடைய இணையத்  தளமான MYKMU.net   அம்னோ  இளைஞர்கள்  நஜிப்பைக்  கவிழ்க்க  சதி  செய்கிறார்கள்  என்று  குற்றம் சாட்டியிருப்பதற்கு  கைரியின்  எதிர்வினை  இது.