மகாதிர்: ஜிஎஸ்டி அகற்றப்பட வேண்டும்

 

gstmபொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அகற்றப்பட வேன்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று கூறினார்.

 

“ஜிஎஸ்டி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று இன்று கோலாலம்பூரில் ஒரு கருத்தரங்கில் 500 க்கும் மேரற்பட்டவர்களின் இடியோசை போன்ற கைத்தட்டல் ஆரவாரத்திற்கிடையில் மகாதிர் கூறினார்.

ஜிஎஸ்டி இப்பட்டியே இருக்க வேண்டுமா அல்லது 6 விழுக்காடு வரி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமா அல்லது அகற்றப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மகாதிர் இவ்வாறு பதில் அளித்தார்.

“முன்பு, விற்பணை வரி இருந்தது. அந்த விற்பணை வரியை சற்று கூட்ட வேன்டுமென்றால், அது ஓகே.

“ஆனால், அதிகாரிகளுக்கே புரியாத ஓர் அமைவுமுறையை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள்”, என்றாரவர்.

சிவில் சமூகத்தினர் மற்றும் எதிரணியினர் இந்த ஜிஎஸ்டி மக்களுக்கு சுமையாக இருக்கும் என்றும் அவ்வரி அகற்றப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ஆனால், புரோட்டோன் கார் நிறுவனத்தின் ஆலோசகரான மகாதிர் ஜிஎஸ்டி ஏப்ரல் 1 இல் அமலாக்கப்பட்டதிலிருந்து தேசிய கார்களின் விலை குறைந்துள்ளது என்று கிண்டலாகக் கூறினார்.