ஹுடுட் சர்ச்சை இல்லை; பெர்மாத்தாங் பாவில் பிகேஆரும் பாஸும் கைகோத்து செயல்படுகின்றன

sabuபாஸ்  துணைத்  தலைவர் முகம்மட்  சாபு,   பிகேஆர்  ஹுடுட்-டை  ஆதரிக்காததற்காக பெர்மாத்தாங்  பாவ்  பாஸ்  தொகுதியிடம்  மன்னிப்பு  கேட்டதாகக்  கூறப்படுவதை  மறுத்தார். அச்சர்ச்சைக்குத்  தீர்வு  காணப்பட்டு  விட்டது  என்றாரவர்.

மே 7  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலில்  பிகேஆர்  வேட்பாளர்  டாக்டர் வான்  அசிசாவை  ஆதரிக்க  பெர்மாத்தாங்  பாவ் பாஸ்  ஒப்புக்கொண்டிருப்பதால்  மன்னிப்பு  கேட்பதற்கே  அவசியமில்லை  என மாட் சாபு  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும் அவர்  கூறினார்.

“சர்ச்சை  தீர்ந்தது. இப்படிப்பட்ட  கருத்துவேறுபாடுகள்  எப்போதும்  இருக்கவே  செய்யும்.

“மனிதர்களாகிய  நாம்தான்  பிரச்னைகளுக்குத் தீர்வு  காண  வேண்டும்”, என்றவர்  குறிப்பிட்டார்.