வாக்காளர் ஆதரவு சுஹாய்மிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது

suhபெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலில் களமிறங்கும்  பிஎன்  வேட்பாளர்  சுஹாய்மி  சபுடினுக்கு  தேர்தலில்  வெற்றிபெறும்  நம்பிக்கை  முதலில்  இல்லை  ஆனால், இப்போது வந்திருக்கிறது.

அத்தொகுதில்  வாக்காளர்களைச்  சந்தித்த  பிறகு  அவருக்கு  இந்த  நம்பிக்கை  வந்திருக்கிறது.

“நான்தான்  பிஎன்  வேட்பாளர்  என்று கூறியதும்  அதற்கு  எதிர்வினையாக,   உதவுவதாக  அதாவது  பிஎன்னுக்கு  வாக்களிப்பதாகக்  கூறினார்கள்.

“அடுத்த  மூன்றாண்டுகளுக்கு  அவர்களுக்குச் சேவையாற்ற  ஒரு  வாய்ப்பு  கொடுக்குமாறு  அவர்களைக்  கேட்டுக்கொண்டேன்”, என  பெர்மாத்தாங்  பாவில் தமது  அன்றாட செய்தியாளர் கூட்டத்தில்  சுஹாய்மி  தெரிவித்தார்.