பாஸ் உலாமா: கட்சி அதிருப்தியாளர்கள் புதிய கட்சி அமைக்க வேண்டாம்

ahmadபாஸ்  உலாமாவும்  கட்சித்  தலைவர் பதவி போட்டியாளருமான அஹ்மட்  ஆவாங், அதிருப்தியுற்ற கட்சி  உறுப்பினர்கள் ஒரு  புதிய  கட்சியை  அமைக்க  வேண்டிய  அவசியமில்லை  என்கிறார். அதாவது  அவர்கள்  கட்சியில்  இருந்துகொண்டே கட்சிக்காக  போராட  வேண்டும்  என்றவர்  கூறுகிறார்.

ஜூன் மாதம், பாஸ்  ஆண்டுக்  கூட்டம்  முடிந்து   தேவையென்றால்  புதிய கட்சி  ஒன்றை  அமைக்கலாம்  என்று ஒரு  என்ஜிஓ-வான  பெர்சாத்துவான்  உம்மா  செஜாத்ரா மலேசியா(பாஸ்மா)  நேற்று  கூறியிருப்பதற்கு  எதிர்வினையாக  அவர்  இவ்வாறு கூறினார்.

“இன்னொரு  இஸ்லாமிய  கட்சி  அமைவதை  நான்  விரும்பவில்லை.

“மலேசியா  ஒரு  சிறிய  நாடு. பெரிய  நாடான  இந்தோனேசியாவில்கூட  கட்சிகளை  எல்லாம்  ஒன்றிணைக்க  முயல்கிறார்கள்”, என்றவர்  கூறினார்.

பக்கத்தானின்  ஆதரவாளரான  அஹ்மட்,  எதிர்வரும்  பாஸ்  கட்சித்  தேர்தலில்  நடப்புத்  தலைவர்  அப்துல் ஹாடி  ஆவாங்கை  எதிர்த்துப்  போட்டியிடுகிறார்.