தியன் சுவா முரட்டுத்தனமான முறையில் கைது செய்யப்பட்டார்

 

Tianarrestedசெபராங் ஜெயா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கையில் பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் பண்டார் பெர்டா, செபராங் பிறை போலீஸ் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்பு கொண்ட போது, “நான் இங்கிருக்கிறேன்,ஆனால் இப்போது பேச முடியாது” என்று தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு தியன் கூறினார்.

இருப்பினும், நள்ளிரவு 12. 15 க்கு செய்திருந்த டிவிட்டரில், “தமது காரை போலீசார் செபராங் ஜெயா நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தினர் என்று தெரிவித்தார்.

“நான் கைது செய்யப்படுகிறேனா, அவர்கள் என்னை எங்கு கொண்டு செல்வார்கள் என்று கேட்ட போது போலீசார் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். பலர் என்னை தலையில் தாக்கினர், எனது தலைமுடியைப் பிடித்து இழுத்தனர்.”

போலீசார் தம்மை கோலாலம்பூரில் அடைத்து வைக்க திருப்பி அனுப்புவார்கள் என்று தாம் நம்புவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினரான தியன் சுவா கூறினார்.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மாச்சாங் புபோக் மற்றும் குபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர்களான லீ காய் லூன் மற்றும் சியா கா பெங் ஆகியோர் போலீஸ் தலைமையகத்திற்கு விரைந்தனர்.

“அவர் (தியன்) முரட்டுத்தனமாக நடத்தப்பட்டிருக்கிறார்”, என்று லீ கூறிக்கொன்டார்.

மே 1 இல், கோலாலம்பூரில் நடந்த ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதற்காக தியன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது.