இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?, விவாத மேடை! (updated)

najib and mahathirமலேசியாகினியின் இந்த விவாத மேடையை செம்பருத்தி ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வெள்ளிக்கிழமை, மே 8-ஆம் தேதி. மாலை 8 மணிக்கு  மலேசியாகினி ஆய்வரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

தமிழில் நடைபெறும் இதில் தேசிய முன்னணியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக திகழும் பேராக் சட்டமன்ற சபநாயகர் டத்தோ எஸ். கே. தேவமணி, சனநாயக கட்சியின் கிள்ளான் நாடளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, நாடளுமன்றத்தில் சிறந்த விவாதங்களை முன்வைத்து மக்களின் பிரதிநிதியாக திகழும் மலேசிய சோசியலிஸ்ட் கட்சியை சார்ந்த மருத்துவர் ஜெயகுமார் தேவராஜ், ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆலோசகர் நா. கணேசன் மற்றும் பிகேஆர் உதவித் தலைவரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

Forum kiniஇந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களுக்கும், சீன மலேசியர்களுக்கும், மலாய் மலேசியர்களுக்கும், இதர மலேசியர்களுக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன.  மலேசிய அரசமைப்புச் சட்டம் இதனை உறுதி செய்கிறது.

ஆனால், நடைமுறையில் உரிமைகள் இன அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றன. எல்லாம் மலாய்க்காரர்களுக்கே; மிஞ்சியதுதான் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும். ஏனென்றால், மலாய்க்காரர்கள் இந்நாட்டின் பூமிபுத்திரர்கள் அதாவது இளவரசர்கள், மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள். இது அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு அல்ல. இது மலாய், குறிப்பாக அம்னோ, அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.

இந்தியாவிலிருந்து பிரிட்டீஷ் நீராவிக் கப்பலில் ஏறி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் வாரிசு  துன் டாக்டர் மகாதிர் முகமட், தமது உடம்பில் இந்திய இரத்தம் ஓடுவதில் பெருமைப்படுவதாக கூறிக்கொள்கிறார்.   இந்நாட்டின் மேம்பாட்டிற்கு இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறியுள்ள மகாதிர் முகமட். இந்நாட்டை மேம்படுத்திய இந்தியர்கள் மேம்பாடு அடைவதற்கு என்ன, எப்போது செய்தார்?

saamy-vellu_najib_mahathir_600இந்திய சமூகத்திற்கு உரியதை முந்திய தலைவர்கள் செய்யத் தவறி விட்டதற்காக மன்னிப்பு கோரிய நஜிப் ரசாக், இந்தியர்களுக்கு வேண்டியதைச் செய்வதாக உறுதி கூறி இந்திய சமூகம் அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு “இஞ்சி சப்பாத்தி” போடுவதிலிருந்து அரிசி மற்றும் மேகி மீ பொட்டலங்கள் போன்றவற்றை விநியோகிப்பது, ஏகப்பட்ட இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு மானியங்கள் வழங்குவது போன்றவற்றை பெரும் ஆரவாரத்துடன் செய்து வந்தார்.

தாய்மொழிப்பள்ளிகள் (தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள்) அரசாங்க நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்பார்த்திருக்கக் கூடாது என்றும் அறிவித்தார். இறுதியில், இந்தியர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராட வேண்டும் (“Indians must fight for their rights”)  என்றும் நஜிப் பாரிசான் பங்காளியான மஇகாவின் 66 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முழங்கினார்.

இந்தியர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்காக அவர்கள் போராட வேண்டும். யாருக்கு, எந்த அரசாங்கத்திற்கு, எதிராக அவர்கள் போராட வேண்டும்?

இக்கேள்விகளுக்கு விடை காண மலேசியாகினி மேடையில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே அரசியல் கட்சி என்று கூறிக்கொள்ளும் மஇகாவின் தலைவர்களில் ஒருவரான எஸ். கே. தேவமணி, பிஎஸ்எம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, ஹிண்ட்ராப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் நா. கணேசன் மற்றும் பிகேஆரின் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழில் மே 8 இல் இரவு மணி 8.00 லிருந்து நடத்தவிருக்கும் விவாதத்தைதா காண வாருங்கள்.

இந்திய சமூகம் “மேம்பாடு” அடைந்தது எப்போது: மகாதிர் காலத்திலா அல்லது நஜிப் காலத்திலா? விவாதமேடை!

5 hindrafஇந்தியர்களுக்கான மேம்பாடு கடந்த 35 ஆண்டுகளாக எப்படிப்பட்ட சூழலில் எந்த வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டது, அவை எப்படிப்பட்டவை? தேசிய மேம்பாட்டில் நாம் எங்கு உள்ளோம்?ஒதுக்கப்பட்டோமா அல்லது ஒதுங்கி விட்டோமா? மக்கள் கூட்டணியின் மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் கொள்கைகள் எப்படிப்பட்டவை? இது போன்ற வினாக்களுக்கு விடைதேடும் ஒரு களமாக இந்த விவாத மேடை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். இந்த விவாத மேடையின் நிகழ்ச்சி நேரடியாக கணினி வழி காண மலேசியாகினி ஏற்பாடும் செய்துள்ளது.

தொடர்பு: ஜீவி காத்தையா (017 889 8843)

நாள்: 8.5.2015 – வெள்ளிக்கிழமை ; நேரம்: மாலை 8.00                                                                இடம்: Malaysiakini, 9 Jalan 51/205A, Off Jalan Tandang, PJ    

Thinakural_Malaysia_Logo2இந்த நிகச்சிக்கு விளம்பர ஆதரவு தருபவர்கள் tamil malar தினக்குரல் மற்றும் தமிழ் மலர் நாளிதழ்கள்.