வேட்பாளர்களுக்கு பிஎம் கிரெடிட் தேவை என்பது அபத்தம்

simதேர்தலில்  போட்டியிட  விரும்புவோர்  எஸ்பிம் தேர்வில்  பகாசா மலேசியா  பாடத்தில்  குறைந்தது  கிரெடிட்  பெற்றிருக்க  வேண்டும்  என்பது  சுத்த  அபத்தம் என்கிறார் சரவாக்  ஐக்கிய  மக்கள்  கட்சி(எஸ்யுபிபி)த்  தலைவர்  டாக்டர்  சிம் குய்  ஹியான்.

ஆனால், எம்பிகளுக்கும்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும்  நன்றாக  எழுத,படிக்க  தெரிந்திருக்க  வேண்டும்  என்பதை  அவர்  ஒப்புக்கொண்டார்.

“சுத்த  அபத்தமாக  இருக்கிறது. நாமென்ன  கல்விக்கூடமாக நடத்துகிறோம். நன்றாக  பேசக்   கூடியவர்களும்  எழுதக்  கூடியவர்களும்தான்  நமக்குத்  தேவை”.

நாடாளுமன்ற, சட்டமன்றத்  தேர்தல்  வேட்பாளர்கள்  குறைந்தபட்சம்  எஸ்பிஎம்  கிரெடிட்  பெற்றிருப்பதை  ஒரு  தகுதியாக  வைக்க  வேண்டும்  என்று  சர்ச்சைக்குப்  பேர்போன  விரிவுரையாளர்  ரித்வான்  டீ  அப்துல்லா  முன்வைத்த  பரிந்துரைமீது  கருத்துரைத்தபோது  சிம்  இவ்வாறு  கூறினார்.