விவாத மேடையின் முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும்.

najib and mahathirமலேசியாகினியில் (@kini) 8.5.2015-இல் நடைபெற்ற செம்பருத்தியின் விவாத மேடையின் முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும்.

இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?”, என்ற  விவாத மேடை நிகழ்ச்சி சுமார் 180-க்கும் அதிகமானோர் மத்தியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

விவாதத்தில் பங்கெடுத்த ஹிண்ட்ராபட என். கணேசன், எஸ். கே தேவமணி, மக்கள் கூட்டணியின் சார்ல்ஸ் சந்தியாகோ, சேவியர் ஜெயகுமார், ஜெயகுமார் தேவராஜ் தெளிவான அறிவு சார்ந்த வகையில் தங்களின் விவாதங்களை முன்வைத்தனர்.

“மேம்பாடு” எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும், மக்களின் மேம்பாடு எவை என்பதும் அலசப்பட்டது.

என்ன தலைப்பு இது? என்ற வினாக்களை தொடுத்தவர்கள் காணொளியை  கண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

தொடக்க நேரம் 8.30 ஆக இருந்தது, ஆனால் மக்கள் 8.00 மணிக்குள்ளாகவே கூடியதால், நிகழ்ச்சி 15 நிமிடம் முன்னதாக 8.15-க்கு தொடக்கப்பட்டது ஒரு மாற்றமாக இருந்தது. அதோடு நேரம் இரவு 11.30-யை தாண்டியும் மக்களின் கருத்து பரிமாற்றம் தொடர்ந்தது நிகழ்ச்சிக்கு மேலும் மெருகு சேர்த்தது.

சுவராம் தலைவர் கா. ஆறுமுகம் நிகழ்ச்சிவை பொறுப்பாகவும் பொறுமையாகவும் வழி நடத்தியது சிறப்பாக இருந்தது.

“அடுத்த விவாத மேடை எப்போது?” என்ற வினாக்களை பலர் கேட்ட தாகவும், அதிகமானோர் கலந்த கொண்ட விவாத மேடை இதுதான் என்று பெருமை பட்டுக்கொண்டார் மலேசியகினி ஸ்டுடியோ நிர்வாகி சுபியன்.

ஜீவி காத்தையா ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றாக அமைந்தது  என்றார் மலேசியகினியின் முன்னோடியான  பிரமேஸ் சந்திரன்.