நான்கு மாதமாயிற்று. கீர் தோயோ வழக்கில் தீர்ப்பு வரவில்லை

khirபதவியைப்  பயன்படுத்தி  நிலம்  வாங்கியதாக  கீழ்  நீதிமன்றங்களில்  குற்றம்  சாட்டப்பட்டு அதற்காக  12 மாதச்  சிறை விதிக்கப்பட்ட  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார் டாக்டர்  முகம்மட்  கீர்  தோயோ, தீர்ப்பை  எதிர்த்து  மேல்முறையீடு  செய்திருந்தார். ஆனால், மேல்முறையீடு  மீதான  கூட்டரசு  நீதிமன்றத்தின்  தீர்ப்பு  இன்னும்  வரவில்லை.

கீரின்  முறையீடு  மீதான  விசாரணை  ஜனவரி  19-இல்  நடந்தது. இப்போது  நான்கு  மாதங்களாகி  விட்டன.

கூட்டரசு  நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை  செய்த  ஐந்து  நீதிபதிகளில்  ஒருவரான  நீதிபதி  ஜெப்ரி  டான்  கொக் வா  பணி ஓய்வு  பெற்றிருக்கக்  கூடும். அவர்  பிறந்தது மே 16, 1949.

உயர்  நீதிமன்ற  நீதிபதிகளின் பணி ஓய்வு  வயது 66.

தலைமை  நீதிபதி  அரிப்பின்  ஜக்கரியா, உயர்  நீதிமன்றத்  தீர்ப்புகள்  உள்பட எல்லா  நீதிமன்றத்  தீர்ப்புகளும்  வழக்கு  முடிந்த  மூன்று  மாதங்களில்  வாசிக்கப்பட  வேண்டும்  என்று  முன்பே  கூறியிருந்தார்.

நீதிமன்ற  பட்டியலைச்  சோதித்துப்  பார்த்ததில்  கீரின் வழக்குமீதான  தீர்ப்பு  இம்மாதம்  அறிவிக்கப்படும்  என்பதற்கான  அறிகுறி  எதுவும்  இல்லை.