1எம்டிபி : இப்போதைக்கு பிரதமர், ஜோ லோ விசாரணைக்குத் தேவையில்லை

pacபொதுக் கணக்குக்குழு(பிஏசி) இப்போதைக்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையோ  தொழில் அதிபர்  ஜோ  லோ-வையோ  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  மீதான விசாரணைக்கு  அழைக்காது. அதற்கு  அவசியமில்லை  என்றார்  பிஏசி  தலைவர் நூர்  ஜஸ்லான்  முகம்மட்.

விசாரணை  தொடரும்போது  தேவைக்கேற்ப  சாட்சிகள்  விசாரணைக்கு  அழைக்கப்படுவார்கள்  எனச்  செய்தியாளர்களிடம்  நூர்  ஜஸ்லான்  தெரிவித்தார்.

இதுவரை  சாட்சியம்  அளித்துள்ள அரசாங்க  அதிகாரிகள்  1எம்டிபி  பணியாளர்கள்  ஆகியோருடன்  1எம்டிபி-இன்  முன்னாள்  கணக்குத் தணிக்கையாளர்கள்  எல்லாரையுமே பிஏசி  விசாரணைக்கு  அழைத்திருக்கிறது. ஆனால்,  அவர்களின்  சாட்சியங்களைச்  செவிமடுக்க  இன்னும்  நாள்  குறிக்கப்படவில்லை.

“கணக்காய்வாளர்கள்  அடிக்கடி  மாற்றப்பட்டிருப்பது  ஏன்  என்பதை  அறிய  விரும்புகிறோம்”, என நூர்  ஜஸ்லான்  கூறினார்.