கழிப்பறைகூட இல்லாதது பண்டிகாரின் ஆத்திரத்துக்குக் காரணமாக இருக்கலாம்

1-sharirமக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாவின்  அலுவலகத்தில்  முறையான  மேசை  நாற்காலி  கிடையாது, கழிப்பறைகூட  கிடையாது.

இது  மக்களவைத்  தலைவர்   பதவி  விலகுவதற்கு ஒரு  காரணமாக  இருந்திருக்கலாம்  என்கிறார்  பிஎன்  எம்பி  ஷாரிர்  அப்துல்  சமட்.

“அதுதான்  அவரை  அந்த  முடிவுக்குக்  கொண்டு  சென்றிருக்கலாம். வேறு  விவகாரங்களும்  இருக்கலாம்”, என்றாரவர்.

மக்களவைத்  தலைவர்  என்றால் அவருக்குரிய  மரியாதையைக்  கொடுக்கத்தானே  வேண்டும்  என்றாரவர்.

பண்டிகாரின்  பதவி  விலகும்  முடிவு  பற்றிக்  கருத்துரைத்தபோது  ஷாரிர்  இவ்வாறு  கூறினார்

மக்களவைத்  தலைவருக்கான  புதிய  அலுவலகத்தில்  கழிப்பறை  கட்டப்படுவதாக  அவர்  தெரிவித்தார்.

பதவி  விலகல்  தொடர்பில் பண்டிகார்  இன்று  பிற்பகல்  விளக்கமளித்தார். பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  பதவி  விலகல்  கடிதத்தைக்  கொடுத்தது  உண்மை  என்றாரவர். ஆனால்,மாற்றங்கள்  செய்வதாக   அவர்  வாக்குறுதி  அளித்ததும் இவர் முடிவை  மாற்றிக்  கொண்டார்.