ஹாடி: டிஎபிக்கு எதிரான கோபத்திற்கு அல்லாவின் அனுமதி உண்டு

 

pasangryallahallowsகிளந்தான் மாநிலத்தில் ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்க்கும் டிஎபிக்கு எதிராகத் தங்களுடைய சினத்தை வெளிப்படுத்துவது முஸ்லிம்களின் கடமையாகும் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று கோலாலம்பூரில் கூறினார்.

இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டது. அதில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம்பந்தமில்லை என்று அவர் வாதிட்டார்.

“சினம் மனித இயல்பு. இல்லை என்றால் நாம் மனிதர்கள் இல்லை. அல்லாவின் அனுமதி அடிப்படையில் நாம் சினத்தை வெளிப்படுத்துகிறோம்.

“டிஎபி ஹூடுட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. கிளந்தானில் அது அமலாக்கப்படுவதை எதிர்த்து அறிக்கைகளை வெளியிடுகிறது. (இஸ்லாத்தை காப்பதற்கான) கடப்பாடு நமக்கு இருக்கிறது. ஆகவே, நாம் கோபப்படுகிறோம்.

“நாம் கோபப்பட வேண்டும். முஸ்லிம்கள் என்றமுறையில், (இவ்விவகாரத்தில்) நாம் கோபப்பட்டாக வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.