பின்னிரவு துப்பாக்கிச் சூடு பற்றி சிஎம் விளக்க வேண்டும்

sriபுக்கிட்  மெர்தாஜாமில், பின்னிரவு  மணி  ஒன்றுக்குப்  பின்னரும்  ஒரு  கேளிக்கை  மையம்  செயல்பட  அனுமதித்தது  ஏன்  என்று பினாங்கு  முதலமைச்சர்  விளக்கம்  வேண்டும்  என  மலேசிய  குற்றக் கண்காணிப்புப் பணிப்  படை (மைவாட்ச்) தலைவர்  ஆர். ஸ்ரீசஞ்சீவன்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அக்கேளிக்கை  மையத்தில்  நிகழ்ந்த  துப்பாக்கிச்  சூட்டுச்  சம்பவத்தில்  ஒருவர்  கொல்லப்பட்டதால்  இக்கேள்வியை  எழுப்புவது  அவசியமாகிறது  என்றாரவர்,

“2011-இல்  மலாக்கா  எதிரணித்  தலைவர்  டிஏபி  கோ  லியோங்  சான், அங்கு  கேளிக்கை  மையங்கள்  பின்னிரவு  மூன்று  மணி வரை  திறந்திருப்பதற்காக மலாக்கா  முதல்வர்  அலி  ருஸ்தமைக்  குறைகூறினார்.

“மாநில  அரசு ஆதாயத்துக்குத்தான்  முன்னுரிமை  கொடுக்கிறதே  தவிர  மக்களின் பாதுகாப்புக்கு  அல்ல  என்று  டிஏபி  கடுமையாகக்  கண்டனம்  தெரிவித்தது”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

இப்போது  பினாங்கின்  பக்கத்தான்  ரக்யாட்  அரசாங்கமும்  அதையே  செய்திருப்பது  முரண்நகையாக  உள்ளது.

“இதற்கு  பினாங்கு  அரசாங்கம் என்ன  கூறப்  போகிறது?”, என்றவர்  வினவினார்.