வாக்காளர் பதிவு இசி-இன் தனியுரிமையாக இருப்பதை டிஏபி சாடுகிறது

voteதேர்தல்  ஆணையம்  புதிய  வாக்காளர்களைப்  பதிவுசெய்யும் பணியை மெதுவாக  செய்கிறது  அதேவேளை அவர்களைப்  பதிவுசெய்ய  அரசியல்  கட்சிகளையும்  அனுமதிப்பதில்லை  என டிஏபி  சாடியுள்ளது.

2.6 மில்லியன்  தகுதிவாய்ந்த  வாக்காளர்கள் இன்னும்  பதிவு  செய்யப்படாமல்  இருக்கிறார்கள்  என  பலாகோங்  சட்டமன்ற  உறுப்பினர்  இங் தியென்  சீ  கூறினார்.

“வாக்காளர்களாக  பதிவு  செய்துகொள்ள  விழையும்  குடிமக்கள்  சிரமத்தை  எதிர்நோக்குகிறார்கள். வாக்காளராக  பதிவு  செய்ய  போதுமான  இடங்கள்  இல்லை.

“இதற்குமுன்  வாக்காளராக  பதிவு  செய்துகொள்ள  விரும்புவோர்  அரசியல்  கட்சிகளிடம்  பதிந்து  கொள்ளலாம்.

“அரசியல்  கட்சிகளிலிருந்த  உதவிப்  பதிவாளர்கள்  பதவியை  இசி  இரத்துச்  செய்ததை   அடுத்து,  ஒன்று  அஞ்சலகங்களில்  பதிவு  செய்ய  வேண்டும்  அல்லது  இசி  பதிவு  நடவடிக்கைகளை  மேற்கொள்ளும்போது  செய்ய  வேண்டும்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

வாக்காளர்களைப்  பதிவு  செய்யும்  அதிகாரத்தை  மீண்டும்  அரசியல்  கட்சிகளுக்கு  கொடுக்க  வேண்டும்  என  இங்  கேட்டுக்கொண்டார். தகுதிபெற்றவர்கள்  வாக்காளர்களாக  பதிவு  செய்துகொள்ள  அது  உதவியாக  இருக்கும்.